/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கணக்கெடுப்பு பணி இணை இயக்குனர் ஆய்வு
/
கணக்கெடுப்பு பணி இணை இயக்குனர் ஆய்வு
ADDED : மே 02, 2025 05:27 AM

சேத்தியாத்தோப்பு,: கீரப்பாளையம் வட்டாரத்தில் கோடை கால பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியினை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கீரப்பாளையம் வட்டாரம் சி.சாந்தமங்கலம், ஆயிப்பேட்டை, சி.மேலவன்னியூர் உள்ளிட்ட கிராமங்களில் கோடை கால பயிர்கள் சாகுபடி கணக்கெடுப்பு பணியில் வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகள், ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி மாணவிகள், தன்னார்வ மகளிர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆயிப்பேட்டை, சி.மேலவன்னியூரில் பயிர் கணக்கெடுப்பு பணியை கடலுார் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண் அலுவலர்கள் ராஜ்பாபு, வெங்கடேசன், பயிர் அறுவடை பரிசோதகர் வீராசாமி உடனிருந்தனர்.