/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அளவீடு பணி
/
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அளவீடு பணி
ADDED : அக் 08, 2025 12:36 AM
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே பொது பாதை அமைக்க ஆக்கிரமிப்பு வீடுகள் அளவீடு பணி நடந்தது.
சே த்தியாத்தோப்பு, தெற்கு சென்னிநத்தம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, சுடுகாட்டிற்கு செல்ல பொது பாதை ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.
இது தெடார்பாக புவன கிரியில் தாசில்தார் அன்பழகன் தலைமையில் அலு வலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தையில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரி முன்னிலையில், குறுவட்ட நில அளவையர் சுதர்ஷன், வி.ஏ.ஓ., அசோக்குமார் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி பொது பாதை அமைக்க அளவீடு பணி செய்ததால் பரபரப்பு நிலவியது.
தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றிருப்பதாகவும், ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.