/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி
/
மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி
ADDED : ஏப் 21, 2025 06:38 AM

கடலுார் : கடலுாரில் சிகரம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம், மக்கள் சேவை இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் குண்டுஉப்பலவாடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். சிகரம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைமை பொறுப்பாளர் சையத் முஸ்தபா வரவேற்றார். ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி மாநில பொதுச்செயலாளர் சேகர், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சுயம்வரத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளியினர் பங்கேற்றனர்.
கடலுார் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு செயல் ஒருங்கிணைப்பாளர் திருவரசு, சிவாஜி பொதுநல பேரவை தலைவர் தர்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைசெயாளர் ஆனந்தி நன்றி கூறினார்.

