UPDATED : அக் 09, 2026 01:32 AM
ADDED : அக் 09, 2026 01:27 AM
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தாசில்தார் பேச்சுவார்த்தை காரணமாக வாபஸ் பெறப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் அருந்ததிய மக்களுக்கு பட்டா, ஆதிதிராவிட மக்களுக்கு பகுதி நேர ரேஷன்கடை, பொலாந்துறை வாய்க்கால் தெரு மக்களுக்கு மினி குடிநீர் டேங்க் அமைத்தல் மற்றும் சுடுகாட்டிற்கு செல்ல சிமெண்ட் சாலை கோரி இந்திய கம்யூ., மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று காலை சாலை மறியல் போராட்டம்அளிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் செம்மன செல்வி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூவை சேர்ந்த மணிவாசம், சுப்ரமணியன், கலையரசன், துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில், கோரிக்கைகள் குறித்து கலெக்டருக்கு கோப்புகள் அனுப்பி வைப்பதாகவும், பெலாந்துறை வாய்க்கால் தெரு மக்களுக்கு வெற்றித் திட்டத்தில் மினி டேங்க் கட்டுவது தொடர்பாக பி.டி.ஓ., ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது, ஆதிதிராவிடர் நலதுவக்கப்பள்ளிக்கு6மாத காலத்தில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதனையேற்று இன்று நடைபெற இருந்த மறியல் போராட்டத்தை இந்திய கம்யூ.வினர் வாபஸ் பெற்றனர்.
