ADDED : பிப் 28, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலூர்: குறிஞ்சிப்பாடியில் தமிழ்நாடு தையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், கொடியேற்று விழா மற்றும் பேரணி நடந்தது.
கிளை தலைவர் அசோக் தலைமை தாங்கினார். மாநில பிரதிநிதி சீனுவாசன், கிளை பொறுப்பாளர்கள் அஜிஸ்கான், சிங்காரவேல், ராமலிங்கம், ஜோதிமுருகன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் பெருமாள், செயலர் குமார், பொருளாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தையற் கலைஞர்கள் முக்கிய வீதிகளின் வழியாக உர்வலமாக பஸ் நிலையம் வந்து, சங்கத்தின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

