ADDED : ஜன 30, 2025 09:10 PM

கடலுார்; கடலுார் மாவட்ட எஸ்.பி.,அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கடலுார் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமையில், ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை, டி.எஸ்.பி.,சவுமியா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள், போலீசார் தீணடாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். அதில், இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத பற்றுள்ள குடிமகன் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன்.
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும், தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் எனவும், அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை என்பதை உணவர்வேன்.
இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றுக்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, தீண்டாமை ஒழிப்புக்காக போராடிய தியாகிகள் நினைவாக, அவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

