தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/லால்கான்தோப்பு பாதை பிரச்னை பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு

லால்கான்தோப்பு பாதை பிரச்னை பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு

லால்கான்தோப்பு பாதை பிரச்னை பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு


UPDATED : நவ 27, 2026 07:40 PM

ADDED : நவ 27, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 07:40 PM ADDED : நவ 27, 2026 07:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டை லால்கான் தோப்பு பாதை பிரச்னை காரணமாக நடந்த இரு தரப்பு அமைதி பேச்சு வார்த்தையில் கூடுதல் இடம் ஒதுக்க ஜமாத் ஒப்புக்கொண்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.

காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை பேரூராட்சி 1வது வார்டு அம்பேத்கார் தெரு, திருவள்ளுவர் தெருவிற்கு லால்பேட்டை ஜாமியா மஜித்திற்கு சொந்தமான லால்கான்தோப்பு வழியாக பாதை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

லால்கான் தோப்பு பகுதியில் கட்டப்படும் திருமண மண்டபத்திற்கு மதில் கட்டப்பட்டது. இதனால் அம்பேத்கர் தெருவிற்கு செல்லும் போக்குவரத்து தடைப்படும் என எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 24ம் தேதி கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த தாசில்தார் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், மதில் கட்டும் இடம், லால்பேட்டை ஜாமத்தின் பட்டா இடம் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் தெரு மக்கள், மதிலை அகற்ற வேண்டி வி.சி.க., நிர்வாகி ஜெயக்குமார் தலைமையில் தாசில்தார் பாலமுருகனிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், இப்பிரச்னை குறித்து நேற்று லால்பேட்டையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

கூட்டத்தில், தெரு பாதைக்கு இடையூறு இல்லாமல், கூடுதல் தர கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு தற்போது உள்ள 14 அடி பாதையை, 18 அடியாக அகலப்படுத்த கூடுதலாக 4 அடி இடத்தை தருவதாக ஜமாத் தரப்பினர் ஒப்புக் கொண்டனர். இரு தரப்பிலும் இதனை மீறும்பட்சத்தில் போலீஸ் மூலம் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் கடந்த நான்கு நாட்களாக நிலவி வந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்பட்டது.

பேச்சவார்த்தையின் போது அம்பேத்கார் தெரு, திருவள்ளுவர் தெரு மக்கள் தாலுகா அலுவலகம் முன் திரண்டு நின்றதால் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us