/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடிப்படை வசதி இல்லாத தாலுகா அலுவலகம்
/
அடிப்படை வசதி இல்லாத தாலுகா அலுவலகம்
ADDED : டிச 10, 2025 08:41 AM
வே ப்பூர் தாலுகா வில், 53 வருவாய் கிராமங்கள் உள் ளன. தாலுகா அலுவல க கட்டட வளாகத்தில் ஆதார், இ-சேவை மையம், சமூக பாதுகாப்பு, வட்ட வழங்கல், சர்வேயர் அலுவலகங்கள் உள்ளதால், பல்வேறு சான்றுகள் பெறவும், ஆதார் திருத்தம், பொது வினியோக திட்டப் பணிகள், நில அளவை உட்பட தங்களின் தேவைகளுக்காக பொதுமக்கள் தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர்.
இங்கு பல கி.மீ., துாரம் பயணித்து வரும் முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு, தாலுகா அலுவலகத்தில் குடிநீர், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
இதனால் வெளியூர்களிலிருந்து வருவோர், குடிநீருக்காக அருகேயுள்ள கடைகளை தேடி அலையும் அவலம் உள்ளது. மேலும், பொது கழிவறையை அலுவலர்கள் தங்களின் பயன்பாட்டிற்காக பூட்டி வைப்பதால், மக்கள் கடும் சிரமமடைகின்றனர்.
அதனால், வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

