ADDED : டிச 13, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் கூடல் விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மகாலட்சுமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக புலவர் வேல்முருகன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பாரதியின் சிறப்பு மற்றும் தமிழின் பெருமைகளை விளக்கி பேசினார்.
மாணவ, மாணவிகள் இயல், இசை, நாடகம் மூலமாக தங்களது திறமைகளை தமிழ் கூடலில் வெளிப்படுத்தினர். விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முதுகலை தமிழாசிரியர் வினோத் கருத்துரை வழங்கினார்.
நிறைவாக, பட்டதாரி ஆசிரியர் லட்சுமி நன்றி கூறினார்.

