/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பு கடலுாரில் நிலத்தடி நீர் பாதிப்பு
/
கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பு கடலுாரில் நிலத்தடி நீர் பாதிப்பு
கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பு கடலுாரில் நிலத்தடி நீர் பாதிப்பு
கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பு கடலுாரில் நிலத்தடி நீர் பாதிப்பு
ADDED : டிச 13, 2025 06:40 AM

கடலுார்: கடலுார் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வி டுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மையனுாரில் கெடிலம் ஆறு உருவாகிறது. இந்த ஆறு மலட்டாற்றுடன் சேர்ந்து, 112 கி.மீ., துாரத்தை கடந்து திருக்கோவிலுார், அரியூர் வழியாக சேந்தநாட்டை கடந்து கடலுார் மாவட்டத்தில் புகுந்து வங்க கடலில் கலக்கிறது.
கெடிலம் ஆற்றை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். இதற்கிடையே, கெடிலம் ஆற்றில் ஆலை கழிவு வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வரும் நீரை சேமிக்க வேண்டும். கடல் நீர் உட்புகாமல் தடுக்க வேண்டும். கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்; என விவசாயிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
அதன்பேரில், கடலுார் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே பல கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைக்கப்பட்டது. ஆனால், தடுப்பணையில் கழிவு நீர் தேங்கி கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன், ஆற்றையொட்டிய கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது.
இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தும் போது, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.
ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனியாவது இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

