/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை விரிவாக்க பணியால் குடிநீர் குழாய் சேதம் கிராம மக்கள் அதிருப்தி
/
சாலை விரிவாக்க பணியால் குடிநீர் குழாய் சேதம் கிராம மக்கள் அதிருப்தி
சாலை விரிவாக்க பணியால் குடிநீர் குழாய் சேதம் கிராம மக்கள் அதிருப்தி
சாலை விரிவாக்க பணியால் குடிநீர் குழாய் சேதம் கிராம மக்கள் அதிருப்தி
ADDED : டிச 13, 2025 06:39 AM

விருத்தாசலம்: சாலை விரிவாக்கப் பணியில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி, இளமங்கலம், சாத்துக்கூடல் கீழ்பாதி, உச்சிமேடு, தாழநல்லுார் வழியாக பெண்ணாடம் வரை தார் சாலை வசதி உள்ளது.
இதன் மூலம் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஒருவழி சாலையாக உள்ளதால் எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் வரும் போது போக்குவரத்து பாதித்தது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கருவேப்பிலங்குறிச்சி மார்க்க சாலையில் இருந்து ஆலிச்சிகுடி, இளமங்கலம், சாத்துக்கூடல் கீழ்பாதி, உச்சிமேடு பாலம் வரை 5.40 கி.மீ., தொலைவிற்கு 5.58 கோடி ரூபாயில் இடைநிலை சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியது.
இதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் 3.75 மீட்டர் சாலை, 5.50 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
நேற்று காலை, இளமங்கலம் கிராமத்தில் சாலையை விரிவாக்கம் செய்தபோது, சாலையின் ஒருபுறம் புதைந்திருந்த குடிநீர் குழாய்கள் உடைந்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தகவலறிந்த பி.டி.ஓ., லட்சுமி தலைமையிலான ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வந்து, விரிவாக்கப் பணியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் வசந்தபிரியா, உதவி பொறியாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அப்போது, திட்டப் பணிகள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
ஆனால், இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என பி.டி.ஓ., தெரிவித்தார்.
அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்த நிலையில், குடிநீர் குழாய்கள் சேதமடைந்து பாதிப்பது நாங்களே என கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

