/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க மண்டல அலுவலக திறப்பு விழா
/
தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க மண்டல அலுவலக திறப்பு விழா
தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க மண்டல அலுவலக திறப்பு விழா
தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க மண்டல அலுவலக திறப்பு விழா
ADDED : நவ 07, 2025 12:39 AM

கடலுார்: தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் கடலுார் மண்டல அலுவலக திறப்பு விழா நடந்தது.
முத்தையா நகரில் நடந்த விழாவில், கடலுார் மண்டல தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார்.
மாநில துணைசெயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வேளாண்துறை முன்னாள் இயக்குனர் ரங்கராமானுஜம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கடலுார் கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கிருஷ்ணா கேன்சர் சென்டர் உரிமையாளர் ஸ்ரீகிருஷ்ணா, தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் கடலுார் சுப்பிரமணியன், ம.தி.மு.க.,மாவட்டசெயலாளர் ராமலிங்கம், பெட்ரோலிய வணிக சங்க தலைவர் ராமலிங்கம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், உய்ய கொண்டராவி வழக்கறிஞர் வெங்கட்ரமண ராமலிங்கம், கிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் ரம்யா கிருஷ்ணா பங்கேற்று குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர்.
சங்க தலைவர் ஜனார்த்தனன், செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாநில பிரதிநிதிகள் ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணைத்தலைவர்கள், இணைச்செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், கிளை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

