/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.1.92 கோடியில் அறிவுசார் மையம் பணிகள் துவக்கம்
/
ரூ.1.92 கோடியில் அறிவுசார் மையம் பணிகள் துவக்கம்
ADDED : நவ 07, 2025 12:39 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி, நாச்சியார்பேட்டையில் ரூ.1.92 கோடி மதிப்பில், கலைஞர் அறிவுசார் மையம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) காஞ்சனா, தி.மு.க., நகர செயலர் தண்டபாணி, நகராட்சி பொறியாளர் பிரபாகரன், ஒன்றிய செயலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
4வது வார்டு கவுன்சிலர் முத்துக்குமரன் வரவேற்றார். அமைச்சர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்டடம் கட்டும் பணிக்கான பூமிபூஜையை துவக்கி வைத்தார்.
இதில், நகராட்சி உதவி பொறியாளர் செந்தில், மேனேஜர் ஹரி கிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், நகர துணை செயலர்கள் ராமு, நம்பிராஜன், சுந்தரமூர்த்தி, மா வட்ட பிரதிநிதிகள் பாண்டியன், சரவணன், அவைத்தலைவர் செங்குட்டுவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், துணை அமைப்பாளர் கார்த்தி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள், நகராட்சி ஊழிய ர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

