/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
/
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஜூலை 07, 2025 01:57 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை பணி நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பெருமாத்தூர் மாற்று குடியிருப்பு, இந்திரா நகர், வடக்குத்து, பொண்ணுங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை பணியை துவக்கி வைத்து பார்வையிட்டார். முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவைத்தலைவர் வீரராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்தஜோதி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், துணை செயலாளர் ஏழுமலை, ராஜசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சடையப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாக்யராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் தர்மலிங்கம், ஆனந்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கோபு, சிவா, அரங்கராஜன் உடனிருந்தனர்.