/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய டென்னிஸ் பால் போட்டிக்கு கோவையில் தமிழக அணி தேர்வு
/
தேசிய டென்னிஸ் பால் போட்டிக்கு கோவையில் தமிழக அணி தேர்வு
தேசிய டென்னிஸ் பால் போட்டிக்கு கோவையில் தமிழக அணி தேர்வு
தேசிய டென்னிஸ் பால் போட்டிக்கு கோவையில் தமிழக அணி தேர்வு
ADDED : ஏப் 02, 2025 10:36 PM

விருத்தாசலம்; உத்திரபிரதேசத்தில் நடக்க உள்ள தேசிய டென்னிஸ் பால் போட்டியில் பங்கேற்க, கோவையில் நடைபெறும் தமிழக அணி தேர்வில் கடலுார் மாவட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து கடலுார் மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்க செயலாளர் ராஜராஜசோழன் கூறியதாவது:
17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான தேசிய டென்னிஸ் பால் போட்டிகள், உத்திரபிரதேச மாநிலம், பாராபங்கியில், வரும் மே 28ல் துவங்கி, ஜூன் 1 வரை நடக்கிறது.
அதில், தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் வகையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நெஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாநில போட்டி நடக்கிறது. வரும் 5, 6ம் தேதிகளில் நடக்கும் போட்டியில், 26 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், கடலுார் மாவட்டம் சார்பில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முகாசப்பரூர் அரசு மேல்நிலைப் பள்ளி, மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், எருமனுார் வி.இ.டி., பள்ளி மாணவர்கள், கொள்ளுகாரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் பங்கேற்கின்றனர்.
இதில், தனித்திறன்களுடன் தேர்வாகும் வீரர், வீராங்கனைகள், தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, உத்திரபிரதேசத்தில் நடக்கும் தேசிய டென்னிஸ் பால் போட்டியில் பங்கேற்பார்கள் என, கூறினார்.