/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ்நாடு வி.ஏ.ஓ., சங்கம் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு வி.ஏ.ஓ., சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் திருமாவளவன் பேசினார். இதில், வி.ஏ.ஓ., க்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது, டிஜிட்டல் கிராப் சர்வே பணி புறக்கணிப்பு மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.