UPDATED : அக் 16, 2026 06:50 PM
ADDED : அக் 16, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: தம்பதியை தாக்கிய டேங்க் ஆப்பரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாலம் அடுத்த காணாதுகண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 42. இவர் அந்த கிராமத்தில் டேங்க் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அதேகிராமத்தை சேர்ந்த செந்தில்,57; என்பவர் கடந்த 12ம் தேதி சுரேஷிடம் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால், கூடுதலாக தண்ணீர் திறந்து விடுமாறு கூறினார். அதில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுரேஷ், செந்திலை திட்டி தாக்கினார். தடுக்க வந்த அவரது மனைவி சுகந்தி,50;யையும் தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, சுரே ைஷ கைது செய்தனர்.
