/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னெச்சரிக்கையாக டாஸ்மாக் ஊழியர்கள் கைது
/
முன்னெச்சரிக்கையாக டாஸ்மாக் ஊழியர்கள் கைது
ADDED : ஜன 27, 2025 06:17 AM

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இரவில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
அரசு துறையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் நேரத்தில் தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இதனை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னையில் நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக டாஸ்மாக் தொாழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவித்திருந்தனர்.
இதற்காக, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கடை மூடியதும், விற்பனை கணக்குகளை சரிபார்த்துவிட்டு, 11:00 மணிக்கு வெளியே வந்த ஊழியர்களை டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திடீரென கைது செய்தனர்.
நகரில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த சேல்ஸ்மென், சூப்பர்வைசர் என 23 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின் நேற்று காலை  விடுவிடுத்தனர்.
திட்டக்குடி
காத்திருப்பு போராட்டத்திற்காக சென்னை செல்ல முயன்ற, திட்டக்குடியில்  3 பேர், பெண்ணாடத்தில் இருந்து சென்ற 12, என மொத்தம் 15 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் கைது செய்து பின் விடுவித்தனர்.

