/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம்
/
டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம்
ADDED : பிப் 10, 2026 04:10 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று மணி நேரம் கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் பணியாளர்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், காலி பாட்டில் சேகரிப்பில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுவதும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கடலுார் மாவட்டத்திலுள்ள 135 கடைகளும், மதியம் 12 மணிக்கு திறக்காமல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், மாலை 3 மணி வரை காத்திருக்காமல், பல கடைகள் பகல் 2 மணிக்கு கடை திறந்து செயல்பட ஆரம்பித்தது. இதனால் டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர்.

