/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 11, 2025 06:12 AM

கடலுார்: கடலுாரில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினார்.
மாநில செயலாளர் உதயசங்கர், பொருளாளர் ஜெயகணேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.