/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழு
/
டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழு
ADDED : செப் 30, 2025 07:58 AM
கடலுார் : தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், கடலுார் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கோதண்டம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் அல்லிமுத்து வரவேற்றார். சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் பேசினார். மாநில நிர்வாகிகள் ஜெய்கணேஷ், மரகதலிங்கம், முருகானந்தம், சுரேஷ், அருணகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 10 ஆண்டு களுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 9ம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் பாலமுருகன் நன்றி கூறி னார்.