ADDED : நவ 28, 2026 04:38 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: டாஸ்மாக் விற்பனையாளர் பணியில் இருந்த போது உயிரிழந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம், பெரியார் நகரை சேர்ந்தவர் மணி மகன் குப்புசாமி, 49; திருமணம் ஆகாதவர். குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில், விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று (நவ.,27) இவர் 12:00 மணி அளவில் கடையை திறந்தார். அப்போது, அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதைடுத்து கீழே மயங்கி விழுந்த குப்புசாமி, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனையில் குப்புசாமி இறந்தது தெரிய வந்தது. குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
