/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாடா ஏஸ் வேன்கள் மோதல் மூதாட்டி கை துண்டிப்பு
/
டாடா ஏஸ் வேன்கள் மோதல் மூதாட்டி கை துண்டிப்பு
ADDED : ஜூலை 07, 2025 01:54 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாடா ஏஸ் வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பெண்கள் மூவர் படுகாயமடைந்தனர்.
பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 26 பேர் டி.என்.15 - எம்.8146 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வேனில், விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தில் நடந்த இரங்கல் நிகழ்வுக்கு நேற்று வந்து கொண்டிருந்தனர்.
விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், கார்குடல் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிரே வந்த டி.என்.91 - எஸ்.1148 பதிவெண் கொண்ட மற்றொரு டாடா ஏஸ் வேன் நேருக்கு நேர் மோதியது.
அதில், நரசிங்கமங்கலம் பழமலை மனைவி அஞ்சலை, 50, வலது புற முழங்கை துண்டாகி படுகாயமடைந்தார். மேலும், சேட்டு மனைவி புஷ்பவள்ளி, 36, உட்பட இருவர் காயமடைந்தனர். அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அதில், கை துண்டான அஞ்சலை, மேல் சிகிச்சைக்கு கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில், வேன் டிரைவர்கள் கோ.மாவிடந்தல் செல்வராஜ் மகன் வெங்கடேசன்,49; கோனுார் ஆறுமுகம் மகன் சசிகுமார், 21; ஆகியோர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.