/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரி வசூல் நடவடிக்கை நெல்லிக்குப்பத்தில் தீவிரம்
/
வரி வசூல் நடவடிக்கை நெல்லிக்குப்பத்தில் தீவிரம்
ADDED : மார் 14, 2024 05:33 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய கமிஷனர் கிருஷ்ணராஜன் தலைமையில் அதிரடி வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அருகே கீழ்பட்டாம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளி, நகரத்தில் 3 இடங்களில் பள்ளி நடத்தி வருகிறது.
இப்பள்ளி நகராட்சிக்கு 4 லட்சத்து 14 ஆயிரம் வரி பாக்கி வைத்துள்ளனர். பல முறை நோட்டீஸ் அளித்தும் வரி செலுத்தாததால் நேற்று மாலை கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். பள்ளி நிர்வாகம் கேட்டு கொண்டதாலும், மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதாலும் நேற்று மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதிகாரிகள் பள்ளியிலேயே இருந்து, 2 லட்சம் வசூல் செய்து சென்றனர்.

