ADDED : மே 04, 2025 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏழுமலை, தேர்தல் அலுவலராக பணியாற்றினார்.
மாவட்ட தலைவராக வெற்றிவேல், செயலாளராக தெரேசா கேத்தரின், பொருளாளராக ஏழுமலை, மகளிரணி செயலாளர்களாக ஆரோக்கிய மேரி, அனிதா, மாவட்ட துறை தலைவர்களாக வேலழகன், சேகர், சிவக்குமார், இணை செயலாளராக ராஜசேகரன், அருளமுதன், தலைமையிட செயலாளராக ராஜசேகரன் தேர்வு செய்யப்பட் டனர்.