ADDED : ஜூலை 27, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கனகராஜன் வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள், வட்டார பொறுப்பாளர்கள் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
தி.மு.க., வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பொருளாளர் சிவானந்தம் நன்றி கூறினார்.