ADDED : ஜன 09, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : ராமநத்தத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மங்களூர் வட்டாரத் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சரவணன், துணைச் செயலாளர் வாசுகி முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர், மாவட்ட பொருளாளர் சுரேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அமுதா, வெங்கடாசலம், ரங்கதுரை, சேகர், சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உயர்கல்வி படிப்பிற்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. துரைசாமி நன்றி கூறினார்.