/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் தேக்கு மரம் வெட்டி திருட்டு
/
நெல்லிக்குப்பத்தில் தேக்கு மரம் வெட்டி திருட்டு
ADDED : டிச 18, 2024 07:09 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டி திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி 15 வது வார்டு வாழப்பட்டில் நகராட்சி குடிநீர் டேங்க் உள்ளது. இந்த வளாகத்தில் 15 ஆண்டுகள் வளர்ந்த 2 தேக்கு மரங்கள் இருந்தன.பல ஆயிரம் மதிப்புள்ள இந்த 2 தேக்கு மரங்களையும் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வெட்டி திருடிச்சென்றனர்.
மரத்தை திருடிச் சென்றது யார் என நகராட்சி ஊழியர்களுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
நகராட்சி அதிகாரிகளை நம்பினால் பயனில்லை என்பதால் அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டரிடம் புகார் அளித்தனர். அதில் மரங்களை திருடியவர்களை கைது செய்யவேண்டும். இல்லை என்றால் சாலை மறியல் செய்யப்போவதாக கூறிப்பிட்டிருந்தனர்.