/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
/
பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : அக் 25, 2025 07:53 AM

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை சார்பில் ஸ்மார்ட் ஹோம் எரிசக்தி மேலாண்மை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் அறக்கட்டளை செயலர் விஜயகுமார் தலைமை தாங்கினர்.
கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணைமுதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர்.
சென்னை இவி ட்ரான் டெக் பிரைவேட் நிறுவனத்தின் பொறியாளர், அசோசியேட் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிர்வாகி சிவகாமி, ஸ்மார்ட் ஹோம் எரிசக்தி மேலாண்மை என்ற தலைப்பில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை தானாக கண்காணித்து, ஆற்றலை சேமிக்க உதவும் நவீன தொழில்நுட்பம் குறித்து பேசினார்.
கருத்தரங்கில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துறைத்தலைவர் சிவசக்தி, துணை பேராசிரியர் ராஜசேகரன் செய்திருந்தனர்.

