/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி
/
விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி
ADDED : டிச 27, 2024 06:34 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை., சார்பில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின விவசாயிகளுக்கான விளைபொருட்கள் சார்ந்த மதிப்பு கூட்டல் தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
இதில் சிறுதானியம், காய்கறி, பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் மதிப்பு மதிப்புகூட்டல் பற்றி பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி பற்றி விவசாயிகள் முருகன் மற்றும் சிலம்பு செல்வி விளக்கினர்.
தேனீ வளர்ப்பு மற்றும் பதப்படுத்தல் குறித்து சுதந்திரசெல்வன் செயல் விளக்கம் அளித்தார்.
பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், பேராசிரியர்கள் கண்ணன், சுகுமாறன், இணை பேராசிரியர்கள் ஜெயக்குமார், பாரதிகுமார், உதவி பேராசிரியர்கள் காயத்ரி, கலைச்செல்வி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

