நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் பாண்டுரங்கன், 32; கூலித் தொழிலாளி. இவர், திருமணமாகாத ஏக்கத்தில், கடந்த 4ம் தேதி அதே பகுதியில் உள்ள கோவில் அருகே குடிபோதையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.