/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 2வது முறையாக 100 டிகிரியை தாண்டிய வெயில்
/
மாவட்டத்தில் 2வது முறையாக 100 டிகிரியை தாண்டிய வெயில்
மாவட்டத்தில் 2வது முறையாக 100 டிகிரியை தாண்டிய வெயில்
மாவட்டத்தில் 2வது முறையாக 100 டிகிரியை தாண்டிய வெயில்
ADDED : மே 04, 2025 05:05 AM
கடலுார், : கடலுார் மாவட்டத்தில் நேற்று வெயில் 101.8 டிகிரி பதிவானது.
கடலுார் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி வெப்ப நிலையை தாண்டினாலும் கடலுார் மாவட்டத்தில் 2வது முறையாக வெப்பம் 100 டிகிரியை கடந்துள்ளது.
நேற்று முதல் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது. அதனால் பொது மக்கள் வெயில் சற்று குறைவாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக நேற்று காலையில் இருந்தே வெப்பம் அதிகரித்தது.
நேரம் செல்ல செல்ல வெப்பம் காரணமாக சாலையில் நடமாட்டம் குறைந்தது. வெப்ப அலை வீசியதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.
வேலை காரணமாக வெளியில் சென்றவர்கள் வெயிலில் இருந்து விடுபட குளிர்பான கடைகளில் தஞ்சம் அடைந்தனர். மாலை வரை வெயிலின் தாக்கம் தனியவில்லை. குழந்தைகள், முதியவர்கள் அவதிப்பட்டனர். கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.8 டிகிரி வெயில் பதிவானது.
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று துவங்குகிறது. இந்தாண்டும் கூடுதல் வெப்ப அலை வீசும் என தெரிகிறது.

