/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சதீப திருவிழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
/
லட்சதீப திருவிழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
ADDED : பிப் 02, 2025 05:00 AM
புதுச்சத்திரம் : சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலில் திருப்பணி வேலைகள் நிறைவடையாததால், லட்சதீபத் திருவிழா நடைபெறாது என, கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் பிரசித்தி பெற்ற முனியனார் திருக்கோவில் உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமை லட்சதீப திருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம்.
இக்கோவில் சிதிலமடைந்ததையொட்டி கடந்தாண்டு பாலாலயம் செய்து, கோவில் இடிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் திருப்பணி வேலைகள் நிறைவடையாத காரணத்தால், இந்தாண்டு லட்சதீப திருவிழா நடைபெறாது என கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.