ADDED : செப் 23, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கோவில் காவலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் அடுத்த ஏ.வடு க பாளையத்தைச் சேர்ந்தவர் திவாகரன், 31; திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் இரவு நேர காவலாளி.
கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் நேற்று முன் தினம் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே திவாகரன் இறந்து விட்டதாக கூறினார்.
புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
