இரு டாஸ்மாக் கடைகள் மூடல் பண்ருட்டியில் மக்கள் மகிழ்ச்சி
இரு டாஸ்மாக் கடைகள் மூடல் பண்ருட்டியில் மக்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 23, 2026 04:44 AM

பண்ருட்டி: பண்ருட்டியில் இரு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் விஜய், மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிட்டார். இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த, பண்ருட்டி சென்னை சாலை ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை எண். 2621 மற்றும் லிங்க் ரோட்டில் இயங்கி வந்த கடை எண் 2453ம் இரு மாத அவகாசத்திற்கு பின் அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி இரு கடைகளையும் அகற்ற பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இரு டாஸ்மாக் கடைகளும் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டது.
அதனை வரவேற்று பா.ம.க., மருத்துவ அணி மாநில தலைவர் கவுரிசங்கர் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
