/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாண்டராசன்குப்பத்தில் கோவில் கும்பாபிஷேகம்
/
வாண்டராசன்குப்பத்தில் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 23, 2024 05:24 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த வாண்டராசன்குப்பம் மற்றும் வன்னியர்புரம் கிராமத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன், பாலமுருகன், வள்ளி தேவசேனா சமேத சக்திமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கும்பாபிேஷக பூஜைகள் கடந்த 21 ம் தேதி காலை துவங்கியது. இரவு 8:00 மணிக்கு முதல்கால யாசாலை பூஜை நடந்தது. நேற்று (22ம் தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை, துவங்கியது.
8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9:15 மணிக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கலசங்ககள் கோவில் உலா வந்து, பாலவிநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகள் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.
9:45 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சக்தி முருகன் கோவில், 10:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இரவு சாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

