UPDATED : ஆக 17, 2026 03:35 PM
ADDED : ஆக 17, 2026 03:20 PM
பண்ருட்டி:கோவில் பூட்டை உடைத்து தாலி, வெள்ளி வேலை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கடந்த 15ம் தேதி பூஜைகள் முடிந்த பின் இரவு 9 கோவில் கதவுகள் பூட்டபட்டது.
மறுநாள் 16ம் தேதி காலை கோவிலை திறக்க பூசாரி சென்றபோது, கோவிலின் பிரதான கதவின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலி, கையில் வைத்திருந்த வெள்ளி வேல் மற்றும் கோவிலில் இருந்த உண்டியல் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
