ADDED : மார் 30, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கோவில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கன்னியங்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கோவிலை பூட்டிச் சென்ற நிலையில், காலையில் உண்டியல் மாயமானது தெரிந்தது.
கிராம மக்கள் தேடிவந்த நிலையில், அப்பகுதியில் உள்ள குளத்தில் உண்டியல் கிடந்தது. உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள், காணிக்கையை திருடிவிட்டு, உண்டியலை குளத்தில் வீசிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து ஆலடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.