/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டென்னிஸ் பயிற்சியாளருக்கு பாராட்டு விழா
/
டென்னிஸ் பயிற்சியாளருக்கு பாராட்டு விழா
ADDED : நவ 06, 2025 05:21 AM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் பயிற்சியாளராக பணிபுரியும் அப்பாதுரையின் சாதனைகளை பாராட்டி, ஆசிரியர் விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
கடலுார் மாவட்ட மாணவி தமிழ்விழி, கடந்த, 2024ம் ஆண்டு சீனாவில் நடந்த அகில உலக சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று காலிறுதி வரை விளையாடினார்.
அதுபோல கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் டென்னிஸ் மற்றும் சாப்ட் டென்னிஸ் பயிற்சி பெறும் மாணவர்கள் மாநில, தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்நியைலில் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கும் கடலுார் மாவட்ட டென்னிஸ் பயிற்சியாளர் அப்பாதுரைக்கு, புதுச்சேரி மேல்பரிக்கல்பட்டு ஆசிரியர் விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். அருள்ராமலிங்கம் வரவேற்றார்.
புதுச்சேரி விளையாட்டுத்துறை உறுப்பினர் செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி ஒலிம்பிக் கழக முதன்மைச்செயலாளர் முத்துகேசவலு, புதுச்சேரி விளையாட்டுக்குழும நிர்வாக அதிகாரி பாஸ்கரன், அறக்கட்டளை நிறுவனர் மேஜர் முத்துலிங்கம், போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று பயிற்சியாளர் மற்றும் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
பயிற்சியாளர் அப்பாதுரை ஏற்புரை ஆற்றினார். கிருஷ்ணசாரதி நன்றி கூறினார்.

