நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தை அமாவாசை முன்னிட்டு விருத்தாசலம் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் மணவாளநல்லுார் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்கள் தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு 7:00 மணியளவில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கருவேப்பிலங்குறிச்சி ரோடு வேடப்பர் கோவில், எருமனுார் ரோடு ஜெகமுத்து மாரியம்மன், தென்கோட்டைவீதி மோகாம்பரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.