ADDED : ஜன 01, 2024 05:40 AM
கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் 'தினமலர்' கோலப்போட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது. போட்டியாளர்கள் வரைந்த வண்ணக்கோலங்கள் பார்வையாளர்கள் மனதை கொள்ளை கொண்டன.
கோலப்போட்டியில் பங்கேற்க மூன்று மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தினர். போட்டி தடையின்றி நடைபெற வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டதுடன், வாகனங்களை நிறுத்த பார்க்கிங் ஏற்பாடுகளையும் போலீசார் செய்திருந்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, துாய்மை பணிகளை மேற்கொண்டனர். பிளீச்சிங் பவுடர் தெளித்து, சுகாதார ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட நிர்வாகமும், நல்ல முறையில் ஏற்பாடுகளை செய்து கொடுத்தது.மூன்று மாவட்ட பெண்கள் பங்கேற்ற கோலத்திருவிழா சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த கடலுார் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்து போலீசார், ஊர்க்காவல் படையினர், மின் துறையினர், சிறப்பு மருத்துவக் குழுவினர், சூப்பர் ருசி பால் நிறுவனம் மற்றும் இணைந்து வழங்கிய அனைவருக்கும் தினமலர் நாளிதழ் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
போட்டியை காண குவிந்த பொதுமக்களுக்கும், தினமலர் வாசகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.