/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகாளய அமாவாசையொட்டி மணிமுக்தாற்றில் தர்ப்பனம்
/
மகாளய அமாவாசையொட்டி மணிமுக்தாற்றில் தர்ப்பனம்
ADDED : செப் 21, 2025 11:26 PM
விருத்தாசலம்:மகாளய அமாவாசையொட்டி, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்தனர்.
சூரியனும், சந்திரனும் இணைந்து வரக்கூடிய நாளை அமாவாசை என்கிறோம். அதிலும், மகாளய அமாவாசை இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமையில் வந்தது கூடுதல் சிறப்பாகும்.
முன்னோர்களுக்குதர்ப்பனம் கொடுக்க மறந்தவர்கள் இந்நாளில் தர்ப்பனம் கொடுக்கும் போது புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல், ஏராளமானோர் திரண்டனர்.
ஆற்றில் தேங்கிய ஊற்று நீரில் நீராடி, முன்னோர்களுக்கு பச்சரிசி, எள், வெல்லம், காய்கறிகள், அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்களுடன் தர்ப்பனம் கொடுத்து வேண்டினர்.
பின்னர், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏக நாயகர் கோவிலில் தரிசனம் செய்து, பகவான் மகாவீர் பசு மடத்தில் உள்ள பசுக்களுக்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.