UPDATED : அக் 30, 2026 09:47 PM
ADDED : அக் 30, 2026 09:45 PM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஊமங்கலம் அடுத்த எலுமிச்சை காலனியை சேர்ந்தவர் தமிழ்மணி,52; கூலித் தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்மணி குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
அதில் விரக்தியடைந்த தமிழ்மணி கடந்த 25 ம் தேதி மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதில் படுகாயமடைந்த அவரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று மாலை இறந்தார்.
ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
