ADDED : பிப் 11, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: அதிக மது போதையில் கீழே விழுந்த ஆட்டோ டிரைவர் இறந்தார்.
கடலுார் புது வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் மணிவண்ணன் 30; ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உள்ளவர். இவர் நேற்று முன்தினம் அதிகம் குடித்துவிட்டு தள்ளாடியபடி வீட்டிற்கு வந்தார்.
அப்போது கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவரை அருகில்இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

