/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாமியார்பேட்டை கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் பணிகளை துவக்காமல் கிடப்பில் கிடக்கும் அவலம்

ADDED : அக் 29, 2025 07:18 AM
சாமியார்பேட்டை கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் பெறும் திட்டம், துவக்கப்படாமல் அறிவிப்பாகவே உள்ளது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சிலம்பிமங்களம் ஊராட்சிக்குட்பட்ட சாமியார்பேட்டை கடற்கரை மாவட்டத்தில் உள்ள, சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், விடுமுறை தினங்களில் பொழுதுபோக்கிற்கு இங்கு வருகின்றனர்.
இதனால் சாமியார்பேட்டை கடற்கரையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கோரிக் கை விடுக்கப்பட்டது. அதையடுத்து தமிழக அரசு, கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழகத்தில் சென்னை, திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம்,விழுப்புரளம் மாவட்டம் கூத்துப்பட்டு, கடலுார் மாவட்டம் சாமியார் பேட்டை உள்ளிட்ட 6 கடற்கரைகளுக்கு, தூய்மையான கட ற்கரை என்பதற்கான, நீலக்கொடி சான்றிதழ்பெற முயற்சிக் கப்படும் என அறிவித்தது.
தேர்வு செய்யப்படும் கடற்கரைகளுக்கும் நீலக்கொடி சான்றிதழ்பெற, 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த பணிகளும் துவக்கப்படாமல் அறிவிப்பாகவே உள்ளது.
எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சாமியார்பேட்டை கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெரும் திட்டத்தை துவக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுற்றுலா பயணிகள், பொது மக்கள் மத்தியில் எதிர்பார்க்கின்றனர்.