ADDED : ஜன 13, 2024 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : கிள்ளை, முடசல் ஓடையை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது படகில், சி.மானம்பாடி சுரேந்திரன், 28; கிள்ளை சரண்யன், 39; கீழ் அனுவம்பட்டு குரு, 27, ஆகியோர் நேற்று படகில், மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, வெள்ளாற்று முகத்துவாரத்தில் திடீரென படகு சிக்கி கவிழ்ந்தது.
இதில், சுரேந்திரன் நீரில் மூழ்கி மாயமானார். சரண்யன், குரு ஆகியோர் நீந்தி கரைக்கு திரும்பி வந்தனர்.
தகவலறிந்த, முடசல் ஓடை கிராம மீனவர்கள், படகில் கிள்ளையில் இருந்து சாமியார்பேட்டை கடல் பகுதியில் சுரேந்திரனை தேடினர்.
புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.