ADDED : மார் 12, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த வேகாக்கொல்லையை சேர்ந்த நடராஜன் மகன், தினேஷ், 15; சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 10ம் தேதி காலை வீட்டை விட்டு சென்ற தினேைஷ காணவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், குள்ளஞ்சாவடி அருகே பெலாந்தோப்பு பகுதியில் உள்ள ஏரியில் தினேஷ் இறந்து கிடந்தார்.
ஏரியில் இயற்கை உபாதைக்காக இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.

