/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
/
கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ADDED : பிப் 26, 2024 06:04 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எரிந்ததால் பரபரப்புநிலவியது.
பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவர் நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் பி.ஒய்.01 சி.க்யூ 9250 எண்ணுள்ள போர்டு காரில் கடலுார் சென்று கொண்டிருந்தார்.
கார் நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புக்கம் புகை வந்தைதை கண்டு அதிர்ச்சி அடைந்து காரை நிறுத்திவிட்டு கலைவாணனும் மற்றவர்களும் காரில் இருந்து இறங்கினர். அடுத்த சில நொடிகளில் காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
இதில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

