/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடுப்புக் கட்டையில் மோதிய கார் தீப்பற்றி எரிந்து சேதம்
/
தடுப்புக் கட்டையில் மோதிய கார் தீப்பற்றி எரிந்து சேதம்
தடுப்புக் கட்டையில் மோதிய கார் தீப்பற்றி எரிந்து சேதம்
தடுப்புக் கட்டையில் மோதிய கார் தீப்பற்றி எரிந்து சேதம்
ADDED : ஜன 07, 2024 04:43 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி பாலத்தின் தடுப்புக் கட்டையில் மோதிய கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
விழுப்புரம், அக்ரி நகரைச் சேர்ந்தவர் ஜெரால்டு, 57; இவரது மகள் ரஞ்சனா, 21; இருவரும், வேளாண்கண்ணி செல்ல நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு வீட்டில் இருந்து ஹூண்டாய் சேன்ட்ரோ காரில் புறப்பட்டனர்.
இரவு 11:00 மணிக்கு, சென்னை - கும்பகோணம் சாலையில் கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடி வளைவு பாலத்தில் சென்றபோது, கார் நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி, தீப்பிடித்து எரிந்தது.
சுதாரித்த ஜெரால்டு, அவரது மகள் ரஞ்சனா இருவரும் காரில் இருந்து அவசரமாக வெளியேறி உயிர் தப்பினர்.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும், கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. விசாரணையில், எதிரே வந்த வாகனத்தில் இருந்த அதிக வெளிச்சத்தினால், ஜெரால்டு நிலை தடுமாறி தடுப்பு கட்டையில் மோதியது தெரியவந்தது.
இதுகுறித்து, சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.