/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணிச்சல் மிகுந்த 'தினமலர்' நாளிதழ்
/
துணிச்சல் மிகுந்த 'தினமலர்' நாளிதழ்
ADDED : செப் 07, 2025 02:40 AM

புவனகிரி : 'தினமலர்' மக்கள் நலனில் துணிச்சல் மிகுந்த நாளிதழ் என, எழுத்தாளர் புவனகிரி ஜெயபாலன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், தற்போது எழுத்தாளராக உள்ளேன். 'தினமலர்' வாசகர் என்பதில் பெருமையாக உள்ளது. 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் சமூக சிந்தனையில் வளர்ந்த 'தினமலர்' நாளிதழ், சமூக கண்ணோட்டத்துடன், மக்கள் நலனில் துணிச்சல் மிகுந்த நாளிதழ் என்பது அனைவருக்கும் பெருமை.
நாளிதழில் அனைத்து பகுதிகளையும் விரும்பி படிப்பேன். விளையாட்டு செய்திக்கு தனி பக்கம் ஒதுக்கி இளைஞர்களுக்கு பொது அறிவை வளர்ப்பதுடன், சிறுவர் மலர், ஆன்மிக மலர் மற்றும் வார மலரில் இடம் பெறும் போட்டி பகுதிகள் மூளைக்கு வேலை தரும் அறிவு பொக்கிஷமாக உள்ளது. தினமலர் 75ம் ஆண்டு துவக்க விழாவில், வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.